/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்க கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
/
குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்க கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்க கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்க கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : ஜன 27, 2025 02:37 AM
கிருஷ்ணகிரி: குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்க, கிராம சபைக்கூட்-டத்தில் கலெக்டர் வலியுறுத்தினார்.
கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி பஞ்., பூசாரிப்பட்டி கிராமத்தில், 76வது குடியரசு தின விழாவையொட்டி நேற்று கிராம சபைக் கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து பேசியதா-வது: இந்த கிராமத்திற்கு, அடிப்படை வசதிகளான குடிநீர், தெரு-விளக்கு, சாலை, கழிவுநீர் கால்வாய், பொது சுகாதாரம், பள்ளி மற்றும் அங்கன்வாடி மைய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்ப-டுகிறது.
பொதுமக்கள் தங்களின் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். உங்கள் குழந்தைகள் உயர்கல்வி படிப்பதை ஊக்குவிக்க, கல்லுாரிக்கு செல்லும்போது, தமிழக அரசு புது-மைப்பெண் மற்றும் தமிழ்
புதல்வன் திட்டத்தில், மாதம், 1,000 ரூபாய் வழங்குகிறது. குழந்தை திருமணத்தை முற்றிலும் தடுக்க வேண்டும். அவ்வாறு குழந்தை திருமணம் செய்யும் பெற்றோர் மீதும், உடந்தையாக இருப்பவர்கள் மீதும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மழை மற்றும் குளிர் காலங்களில் தொற்று நோய் ஏற்படாதவாறு, குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து கலெக்டர் தலைமையில், வாக்காளர் தின உறுதி-மொழி, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைக-ளுக்கு கற்பிப்போம், தொழு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி
ஏற்றனர்.

