/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பச்சை நிறத்தில் தேங்கிய நீரால்கே.ஆர்.பி., அணையில் துர்நாற்றம்
/
பச்சை நிறத்தில் தேங்கிய நீரால்கே.ஆர்.பி., அணையில் துர்நாற்றம்
பச்சை நிறத்தில் தேங்கிய நீரால்கே.ஆர்.பி., அணையில் துர்நாற்றம்
பச்சை நிறத்தில் தேங்கிய நீரால்கே.ஆர்.பி., அணையில் துர்நாற்றம்
ADDED : ஜன 23, 2025 01:44 AM
பச்சை நிறத்தில் தேங்கிய நீரால்கே.ஆர்.பி., அணையில் துர்நாற்றம்
கிருஷ்ணகிரி, :கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் பச்சை நிறத்தில் தேங்கிய நீரால் துர்நாற்றம் வீசி வருகிறது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் அணை முழு கொள்ளளவான, 52 அடிக்கு தண்ணீர் இருப்பு வைக்கப்பட்டது.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இவ்வாறு, 52 அடிக்கு தண்ணீர் இருப்பு வைக்கப்படும் என்றும், பின்னர் படிப்படியாக நீர்மட்டத்தை குறைத்து, 50 லிருந்து, 51 அடிக்கு தண்ணீர் இருப்பு வைக்கப்படும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர். நேற்று காலை அணை நீர்மட்டம், 51.95 அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 220 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, 285 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது. அணைக்கு கடந்த, 2 நாட்களாக நீரில் அதிகளவில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரைகள், ஷட்டர்கள் அருகே தேங்கியுள்ளது. தண்ணீர் பச்சை நிறமாக மாறி கடும் துர்நாற்றமும் வீசி வருகிறது. அணையில் தேங்கியுள்ள ஆகாய தாமரைகளை தினமும் அகற்றி வருவதாக, பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.