/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை பயிர் சேதம்
/
காட்டுப்பன்றிகளால் நிலக்கடலை பயிர் சேதம்
ADDED : ஏப் 13, 2025 04:34 AM
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் ஏராளமான காட்டுப்பன்-றிகள் உள்ளன. இவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்-களை நாசம் செய்து வருகின்றன. நேற்று முன்தினம்
இரவு வனப்-பகுதியை விட்டு வெளியேறிய, 70க்கும் மேற்பட்ட காட்டுப்பன்-றிகள், நொகனுார் கிராமத்திற்குள் புகுந்து, ஹரிஸ் என்பவரது விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிரை சேதப்படுத்தின. 80 கிலோ கொண்ட ஒரு மூட்டை நிலக்க-டலை தற்போது, 3,500 ரூபாய் வரை, விவசாயிகளிடம் இருந்து வாங்கப்படும் நிலையில், ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டி-ருந்த நிலக்கடலையில், 70 சதவீதத்தை காட்டுப்பன்றிகள் சேதப்ப-டுத்தியுள்ளன. அதனால் அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, வனத்துறையிடம் புகார் செய்தும் நேற்று நேரில் வந்து பார்வையிடவில்லை.

