தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/குரூப் 2 தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி

குரூப் 2 தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி

குரூப் 2 தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி


ADDED : ஜன 01, 2025 01:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2025 01:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

  • குரூப் 2 தேர்வுகளுக்கு

தாட்கோ மூலம் பயிற்சி

கிருஷ்ணகிரி, ஜன. 1-

'குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது' என, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) முன்னெடுப்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மை தேர்விற்கு தேர்ச்சிபெற விரும்பும் மாணாக்கர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியை பெற தேர்ச்சி பெற்றவர்கள், 21 முதல் 32 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவீனத்தொகை தாட்கோவால் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us