sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தி.மு.க., நிர்வாகியின் மகன் உட்பட இருவருக்கு 'குண்டாஸ்'

/

தி.மு.க., நிர்வாகியின் மகன் உட்பட இருவருக்கு 'குண்டாஸ்'

தி.மு.க., நிர்வாகியின் மகன் உட்பட இருவருக்கு 'குண்டாஸ்'

தி.மு.க., நிர்வாகியின் மகன் உட்பட இருவருக்கு 'குண்டாஸ்'


ADDED : பிப் 26, 2026 04:24 AM

Google News

ADDED : பிப் 26, 2026 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கோவில் திருவிழா மோதல் சம்பவத்தில், தி.மு.க., நிர்வாகியின் மகன் உட்பட இருவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பூங்காவனத்தம்மன், அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை விழா கடந்த, 16ல் நடந்தது.

இதில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் மகேந்திரன் மகன் ஆகாஷ் தரப்பினருக்கும், சந்தாபுரம் பிரசாந்த், தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆகாஷ் தரப்பினர், பட்டா கத்தியால், 15க்கும் மேற்பட்டோரை வெட்டினர்.

பிரசாந்த் புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் இதுவரை ஆகாஷ், 23, சாண்டி, 21 உள்பட, 8 பேரை கைது செய்தனர். இதில், ஆகாஷ் மீது அடி தடி, கஞ்சா, 'புள்ளிங்கோ ரீல்ஸ்' வெளியிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், வழக்கில் கைதான ஆகாஷ், சாண்டி ஆகிய, 2 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, பரிந்துரை படி, கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டார். அவர்கள் இருவரும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us