குட்கா கடத்திய லாரி பறிமுதல் வட மாநில டிரைவர் கைது
குட்கா கடத்திய லாரி பறிமுதல் வட மாநில டிரைவர் கைது
ADDED : செப் 01, 2026 06:05 AM

அ நிறம் | அளவு
ஓசூர்; ஓசூர் ஹட்கோ எஸ்.ஐ., அறிவழகன் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் பேரண்டப்பள்ளி அருகே சாட்டிலைட் ரிங் ரோடு அருகே, வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழி-யாக வந்த லாரியை மடக்கி சோதனையிட்டதில், 2.5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கர்நாடக மாநில மது வகை-களை கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து லாரியை ஓட்டிச்சென்ற உத்தரபிரதேச மாநிலம், ஜாடிஸ்பூரை சேர்ந்த பங்ககிரி, 30, என்பவரை கைது செய்து, லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
