/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் மாணவியர் உள்ளிருப்பு போராட்டம்
/
தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் மாணவியர் உள்ளிருப்பு போராட்டம்
தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் மாணவியர் உள்ளிருப்பு போராட்டம்
தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் மாணவியர் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஜூலை 02, 2025 01:39 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில், பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, மாணவியர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி நகரிலுள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, 3,300 மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி தலைமை ஆசிரியராக கடந்த, 2018ல் மகேந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 7 ஆண்டுகளாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர், தன் சொந்த விருப்பத்தின் பேரில், மாவட்ட சி.இ.ஓ., அலுவலகத்தில் உதவி திட்ட அலுவலராக பணியிடமாற்றம் பெற்றார்.
தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் தகவலறிந்த மாணவியர், பள்ளி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்து, மீண்டும் அவரையே தலைமை ஆசிரியராக நியமிக்க அழுதபடி கோஷமிட்டனர். பள்ளிக்கு வந்த டவுன் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவியரிடம் பேச்சுவார்த்தை நடத்த, தலைமை ஆசிரியரை அறிவுறுத்தினர்.
இதையடுத்து, தலைமை ஆசிரியர் மகேந்திரன், மாணவியரிடம், இதுபோன்ற போராட்டம் நடத்துவது தவறான செயல். அனைவரும் அமைதியாக சென்று அவரவர் வகுப்புகளில் அமர்ந்து நன்றாக படிக்க அறிவுறுத்தினார். அத்துடன், 'நான் இங்கே தான் இருப்பேன்' எனக்கூறியதையடுத்து மாணவியர் கலைந்து, அவரவர் வகுப்புகளுக்கு சென்றனர்.