ADDED : செப் 26, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை, 30 நிமிடங்கள் கனமழை பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீருடன் மழை நீரும் வெளியேறியதால் கடும் துர்நாற்றம் வீசியது. மாலையில் பள்ளி, கல்லுாரியில் இருந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியர் அவதிக்குள்ளாகினர். கலெக்டர் அலுவலகம் எதிரில் மழைநீர் குளம்போல் தேங்கியது. கனமழையால் வெப்பத்தின் தாக்கம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. இதே போல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது.