ADDED : ஆக 04, 2025 08:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. மதியம், 2:30 மணிக்கு மேல் விட்டு, விட்டு கனமழை பெய்தது.
ஓசூர் பகுதியில் கடந்த மாதம் பரவலாக மழை பெய்ததால், குளிரின் தாக்கம் தென்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் முதல் கனமழை பெய்ததால், காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிரின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் முன்புள்ள சர்வீஸ் சாலை, ராயக்கோட்டை சாலை சந்திப்பு, ராமநாயக்கன் ஏரிக்கரை சாலை உட்பட நகரின் பல்வேறு இடங்களில், மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர்.
ஓசூரில் கடந்த மாதத்தை போல், இம்மாத மும் மழை பெய்வதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

