/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சூறாவளி காற்றுடன் கனமழை: சேதமான மின்கம்பங்கள் சீரமைப்பு
/
சூறாவளி காற்றுடன் கனமழை: சேதமான மின்கம்பங்கள் சீரமைப்பு
சூறாவளி காற்றுடன் கனமழை: சேதமான மின்கம்பங்கள் சீரமைப்பு
சூறாவளி காற்றுடன் கனமழை: சேதமான மின்கம்பங்கள் சீரமைப்பு
ADDED : மே 24, 2024 07:00 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நேற்று முன்தினம் சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
கிருஷ்ணகிரி நகரில், பெங்களூரு ரோடு, பழையபேட்டை, சேலம் ரோடு, மற்றும் அவதானப்பட்டி, வேட்டியம்பட்டி, நெக்குந்தி, கே.ஆர்.பி., அணை பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட மரங்கள், 50க்கும் மேற்பட்ட கிளைகள் மின்கம்பங்கள் மீது விழுந்து மின்தடை ஏற்பட்டது. பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்தும், மின்கம்பிகள் சாலையில் அறுந்தும் விழுந்தன. இதனால் நகர் மற்றும் சுற்று வட்டாரத்தில் முழுமையாக சரிசெய்ய முடிவில்லை. நேற்று காலை முதல் ஒவ்வொரு பகுதியிலும் சேதமான, சாய்ந்து விழுந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு, மின் இணைப்பை சீரமைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.