ADDED : ஜன 12, 2026 05:21 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் கடந்த, 15 நாட்களாக, கடும் குளிர் நிலவுவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்-குள்ளாகி வருகின்றனர்.
வழக்கமாக அதிகாலை மற்றும் இரவில் மட்-டுமே நிலவி வந்த குளிர், தற்போது பகலிலும் கடுமையாக உள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் குளிர் அதிகரித்-துள்ளதால், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் உடல்நல பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதல் சூரியன் தெரியாத நிலையில், அவ்வப்போது பனியுடன் சாரல் மழை பெய்தது.இதனால், பொதுமக்கள் ஜெர்கின், ஸ்வெட்டர், குல்லாவுடன் வெளியில் நடமாடினர். நேற்று பொதுமக்கள் பகல் நேரங்களிலேயே வீடுகளின் முன்பாகவும், கடைகள் அருகிலும் தீயை மூட்டி குளிர் காய்ந்தனர்.
