/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு
/
பள்ளி மாணவர்களுக்கு ஹெல்மெட் விழிப்புணர்வு
ADDED : ஆக 08, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் சப்-டிவிஷனுக்கு உட்பட்ட கோபிநாதம்பட்டி போலீஸ் சார்பில், சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு, அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வாலிபால் மற்றும் கூடைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது.
பின், மாணவர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியம், போக்குவரத்து விதிகள், போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நிகழ்ச்சியில், எஸ்.ஐ., முனிராஜ், எஸ்.எஸ்.ஐ.,க்கள் சரவணன், செந்தில்குமார், பசவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

