/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உயரழுத்த மின்சாரம் மின் சாதனங்கள் பழுது
/
உயரழுத்த மின்சாரம் மின் சாதனங்கள் பழுது
ADDED : ஏப் 23, 2025 01:19 AM
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை நேதாஜி சாலையில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் அதிக மின் அழுத்தம் காரணமாக, வீடுகளில் உள்ள மின் மோட்டார்கள், மின் விசிறிகள், ஏசி, 'டிவி' போன்றவை பழுதாகி வருகின்றன. மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் செய்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தேன்கனிக்கோட்டை துணை மின்நிலையத்திலிருந்து, நேதாஜி சாலைக்கு உயர் ரக மின் கேபிள் வழியாக மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. அதனால் அப்பகுதியில் மின் அழுத்தம் அதிகமாக இருப்பதாக தெரிகிறது. அதை சரி செய்ய அப்பகுதியில் பூஸ்டர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றனர்.