ரூ.31 லட்சத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பு
ரூ.31 லட்சத்தில் உயர்மின் கோபுர விளக்குகள் அமைப்பு
ADDED : மார் 11, 2026 07:22 AM
சூளகிரி,:கிருஷ்ணகிரி
மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகு-திக்கு உட்பட்ட
சிகரமாகனப்பள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்ரி, கொங்கணப்பள்ளி,
கட்டாயம்மேடு ஆகிய, 5 மலை கிராமங்-களில், இரவில் இருள் சூழ்ந்து
காணப்படுவதால், வன விலங்-குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
அதனால்,
உயர்மின் கோபுர விளக்குகள் அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள்
கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, வேப்பனஹள்ளி, அ.தி.மு.க., -
எம்.எல்.ஏ., முனுசாமி, ராஜ்யசபா எம்.பி., இன்பது-ரையிடம், உள்ளூர்
தொகுதி மேம்பாட்டுதிட்டத்தில், உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுத்தார்.
அதையேற்று,
சிகரமாகனப்பள்ளி, சிங்கிரிப்பள்ளி, எப்ரி, கொங்க-ணப்பள்ளி,
கட்டாயம் மேடு ஆகிய, 5 கிராமங்களிலும் மொத்தம், 31 லட்சம் ரூபாய்
மதிப்பில், உயர்மின் கோபுர விளக்-குகள் அமைக்கப்பட்டன. அதை, இன்பதுரை
எம்.பி., மற்றும் முனுசாமி எம்.எல்.ஏ., திறந்து வைத்தனர். அ.தி.மு.க.,
வக்கீல் அணி மாநில துணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன், மேற்கு மாவட்ட
அவைத்தலைவர் நாராயணன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட இணை செயலாளர்
ஜெயபிரகாஷ் உட்பட பலர்
பங்கேற்றனர்.
