பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி
ADDED : ஜூன் 12, 2026 04:32 AM

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, உயர்-கல்வி வழிகாட்டுதல் பயிற்சி துவங்கப்பட்டுள்-ளது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு புதன் கிழமையும், பத்தாம் வகுப்பு மாணவர்க-ளுக்கு, வியாழக்கிழமையும் பயிற்சி வழங்கப்ப-டுகிறது. தலைமை ஆசிரியர் ரமேஷ் தலை-மையில், உயர்கல்வி வழிகாட்டு ஆசிரியர் குண-லட்சுமி இப்பயிற்சியை வழங்கி வருகிறார். இதில், பிளஸ் 2 படிக்கும், 358 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும், ஒவ்-வொரு சனிக்கிழமை அன்றும் ஜே.இ.இ., - நீட், - க்யூட் ஆகிய தேர்வுகளுக்கான பயிற்சியும் வழங்-கப்பட்டு வருகிறது. இதில், 74 மாணவ, மாண-வியர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
முன்பு, உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி, பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்களுக்கு வழங்-கிய நிலையில், தற்போது பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியருக்கு, உயர்-கல்வி படிக்க ஏதுவாக முன்கூட்டியே பயிற்சி வழங்குவதால், பிளஸ் 2 முடித்தபின் மாணவ, மாணவியர் எந்த குழப்பமும் இன்றி உயர்கல்-வியில் சேர இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாணவர்கள் தெரிவித்தனர்.
