ADDED : செப் 12, 2026 06:01 AM
ஓசூர்; ஓசூர் டி.எஸ்.பி.,யாக கடந்த ஜூன் மாத இறுதியி-லிருந்து பணியாற்றி வந்தவர் பாலகிருஷ்ணன்; இவர், துாத்துக்குடி மாவட்டத்தின் காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு பதில், துாத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி.,யாக பணி-யாற்றி வந்த சுதீர், ஓசூர் உட்கோட்ட டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், நேற்று பொறுப்பேற்று கொண்டார். ஓசூர் உட்கோட்டத்தில் பணியாற்றும் இன்ஸ்பெக்-டர்கள், எஸ்.ஐ.,க்கள், காவலர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். கடந்த, 2020ம் ஆண்டு குரூப் 1 தேர்வு மூலம் நேரடியாக டி.எஸ்.பி., சுதீர் தேர்வானார். துாத்துக்குடி மாவட்டம், விளாத்தி-குளம் தி.மு.க., எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், தமிழக முதல்வர் விஜயை அவதுாறாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் பேசியதாக கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.
அப்போது அவரை சந்திக்க வந்த, தி.மு.க., முன்னாள் அமைச்சரும், திருச்செந்துார் எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதா
கிருஷ்ணன், துாத்துக்குடி ரூரல் டி.எஸ்.பி., சுதீர் மற்றும் அவருடன் சபாரி போட்டு வந்த ஒருத்-தரும் தான், தன்னை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைய சொல்லி மிரட்டியதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். அந்த குற்றச்-சாட்டுக்கு ஆளான டி.எஸ்.பி.,யான சுதீர் தான், தற்போது, ஓசூர் டி.எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்-டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
