/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துாய்மை உறுதிமொழி எடுத்த 1,60,157 பேர் உலக சாதனை படைத்த ஓசூர் மாநகராட்சி
/
துாய்மை உறுதிமொழி எடுத்த 1,60,157 பேர் உலக சாதனை படைத்த ஓசூர் மாநகராட்சி
துாய்மை உறுதிமொழி எடுத்த 1,60,157 பேர் உலக சாதனை படைத்த ஓசூர் மாநகராட்சி
துாய்மை உறுதிமொழி எடுத்த 1,60,157 பேர் உலக சாதனை படைத்த ஓசூர் மாநகராட்சி
ADDED : நவ 08, 2025 03:57 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கடந்த ஆக., 15ம் தேதி, 315 இடங்களில் மொத்தம், 1 லட்சத்து, 60 ஆயிரத்து, 157 பேர் துாய்மை நகருக்கான உறுதிமொழி எடுத்து கொண்டனர். இது, 24 மணி நேரத்தில் அதிகமான நபர்களால், அதிக இடங்களில் உறுதி-மொழி எடுத்து கொண்ட நிகழ்வாக கருத்தப்பட்டு, உலக சாத-னையாக, 'எலைட் வோர்ல்ட் ரெக்கார்டு' நிறுவனத்தால் அங்கீக-ரிக்கப் பட்டுள்ளது.
இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, ஓசூர் மாநகராட்சி அலு-வலகத்தில் நேற்று நடந்தது. மாநகர மேயர் சத்யா, கமிஷனர் முகம்மது ஷபீர் ஆலம், துணை மேயர் ஆனந்தையா, பொது சுகாதாரக்குழு தலைவர் மாதேஸ்வரன், மாநகர நல அலுவலர் அஜிதா, துப்புரவு அலுவலர்கள் அன்பழகன், பிரபாகரன் ஆகி-யோரிடம், எலைட் வோர்ல்ட் ரெக்கார்ட் நிறுவன துாதரும், மூத்த ஆய்வதிகாரியுமான அமீத் ஹிங்கரோனி, பதக்கம் மற்றும் சான்றி-தழை வழங்கினார்.அமீத் ஹிங்கரோனி பேசுகையில், ''குப்பையை தரம் பிரித்து தருதல், பொது இடங்களில் குப்பை கொட்டாமல் இருத்தல், துணிப்பையை மட்டுமே பயன்படுத்துதல், கழிவறையை பயன்படுத்துதல் போன்ற செயல்களை உறுதிமொழியாக எடுப்-பதன் மூலம், மக்களின் நடவடிக்கையில் ஒரு மாற்றத்தை எற்ப-டுத்தி, ஓசூர் நகரை துாய்மையான நகரங்களின் பட்டியலில் முதன்மை இடத்தை பிடிக்க வைப்பதற்கான மைல்கல்லாக இருக்கும்,''
என்றார்.

