/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் அடுத்த வாரம் வரை மேம்பால பழுது பணி விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால் போலீசார் அதிர்ச்சி
/
ஓசூரில் அடுத்த வாரம் வரை மேம்பால பழுது பணி விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால் போலீசார் அதிர்ச்சி
ஓசூரில் அடுத்த வாரம் வரை மேம்பால பழுது பணி விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால் போலீசார் அதிர்ச்சி
ஓசூரில் அடுத்த வாரம் வரை மேம்பால பழுது பணி விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால் போலீசார் அதிர்ச்சி
ADDED : ஆக 24, 2025 01:19 AM
ஓசூர், விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கும் நிலையில், அடுத்த வாரம் வரை மேம்பால பழுது பணி மேற்கொள்ளப்படும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை கூறுவது, போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ஓசூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில், கடந்த ஜூன், 21ம் தேதி பழுது ஏற்பட்டது. அதற்கான, 4 பேரிங் செகந்திராபாத்தில் தயாரித்து கொண்டு வரப்பட்டு கடந்த, 18ல் பால சீரமைப்பு பணி துவங்கியது. இன்று (ஆக.24) பணிகள் முடிக்கப்பட்டு விடும் என, தேசிய நெடுஞ்சாலைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது அடுத்த வாரம் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை தான் பணிகள் முடியும் என போலீசாரிடம், தேசிய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
பாலம் பழுதால், அதன் மீது வாகனங்கள் பெங்களூரு செல்ல முடியாமல், ஓசூர் சீத்தாராம்மேட்டிலிருந்து இன்னர் ரிங்ரோட்டில் திருப்பி விடப்பட்டுள்ளன. நகரில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வரும், 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. ஓசூரில் மொத்தம், 1,000க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். அவற்றை காணவும் வழிபடவும் பக்தர்கள் படையெடுப்பார்கள். அதனால் வரும், 27 முதல், 31ம் தேதி வரை, 5 நாட்கள் நகரில் போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும். ஆனால், பால பணி முடியாததால், நகரமே ஸ்தம்பிக்கும் நிலை உருவாகி உள்ளது.
இது குறித்து, போலீசார் கூறுகையில், 'ஞாயிற்றுக்
கிழமை பணிகளை முடித்து விடுவோம் எனக்கூறி விட்டு, தற்போது அடுத்த வாரம் தான் பணிகள் முடியும் என்கின்றனர். ஏற்கனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய போதிய போலீசார் இல்லை. விநாயகர் சதுர்த்தி வருவதால், போக்குவரத்து நெரிசல் மேலும் அதிகரிக்கும். தேசிய நெடுஞ்சாலைத்துறை அலட்சியமாக இருப்பதால், மக்களும், போலீசாரும் தான் சிரமப்பட வேண்டியுள்ளது' என்றனர்.

