/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மலைக்கோவில் தேர் திருவிழா துவக்கம்
/
ஓசூர் மலைக்கோவில் தேர் திருவிழா துவக்கம்
ADDED : மார் 20, 2024 01:52 AM
ஓசூர்:ஓசூர் மலைக்கோவில், தேர் திருவிழா துவங்கியது.
கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை
சந்திரசூடேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் மார்ச் மாதம் தேர்
திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழாவிற்கு
பூ கேட்கும் அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு, 7:00
மணிக்கு நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, 9:00 மணிக்கு,
திருக்கொடியேற்றத்துடன் தேர்த்திருவிழா துவங்கியது. கோவில்
வாச்சீஸ்வர குருக்கள் கோவில் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை செய்து
தீபாராதனை காட்டினார். தொடர்ந்து, மரகதாம்பிகை உடனுறை
சந்திரசூடேஸ்வரர் உற்சவ மூர்த்தி, மலை மீது இருந்து, தேர்ப்பேட்டை
கல்யாண சூடேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.
இரவு, 9:00
மணிக்கு சிம்ம வாகன உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
செய்தனர். விழாவில் இன்று (மார்ச் 20) இரவு, 9:00 மணிக்கு மயில் வாகன
உற்சவம் நடக்கிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வரும், 24 இரவு,
9:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது. 25 காலை, 10:10 மணிக்கு
தேரோட்டம், 26 இரவு பல்லக்கு உற்சவம், 27 இரவு, 7:00 மணிக்கு தெப்பல்
உற்சவம் நடக்கிறது.

