/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் சரக அளவிலான விளையாட்டு போட்டி: அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

ADDED : ஆக 28, 2024 07:34 AM
ஓசூர்: ஓசூர், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி மைதானத்தில், ஓசூர் வடக்கு சரக அளவிலான தடகள போட்டிகள் நடந்தன. பாகலுார் அரசு மேல்நிலைப்பள்ளி போட்டியை எடுத்து நடத்தியது.
இதில், ஓசூர் பேடரப்பள்ளி அரசு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள், 29 பேர், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் பங்கேற்று விளையாடினர். நீளம் தாண்டுதல் போட்டியில், 8ம் வகுப்பு மாணவன் ராஜ் முதலிடத்தையும், குண்டு எறிதலில், 2ம் இடத்தையும் பெற்றார். அதேபோல், 100 மீட்டர் ஓட்டத்தில் மாணவர் ஆசிஷ் ஜீவன், 3ம் இடத்தையும், 7ம் வகுப்பு மாணவர் ஆரிபூல், 200 மீட்டர் ஓட்டத்தில், 2ம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டி, பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ், நேற்று பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியை விஜயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.