/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற ஓசூர் மாணவி
/
டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற ஓசூர் மாணவி
டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற ஓசூர் மாணவி
டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம் வென்ற ஓசூர் மாணவி
ADDED : டிச 09, 2024 07:46 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், மத்திகிரி ராயல் ஆற்காடு லேஅவுட்டை சேர்ந்த ரவி மகள் பேபி சகானா, 20; பி.ஏ., ஆங்கிலம் மூன்றாமாண்டு மாற்றுத்திறனாளி மாணவி. தாய்லாந்து நாட்டில் நடந்த இளையோர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்கள் ஒற்றையர் டேபிள் டென்னிசில், இந்தோனேசியா வீராங்கனையுடன் மோதி, தங்க பதக்கம் வென்றார். கலப்பு இரட்டையரில், சென்னையை சேர்ந்த நிதிஷ், 17, என்பவருடன் விளையாடி வெள்ளி பதக்கம் வென்றார். ஓசூர் திரும்பிய மாணவிக்கு, நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பேபி சகானா கூறியதாவது: கடந்தாண்டு கேலோ இந்தியா போட்டியில் தங்கம் வென்றேன். தமிழக துணை முதல்வர் உதயநிதி, 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். உலகளவில் டேபிள் டென்னிஸ் தர வரிசையில், 18வது இடத்திலும், இளையோருக்கான தரவரிசையில் முதலிடத்திலும் உள்ளேன். 2028 பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம். இவ்வாறு அவர் கூறினார்.