ADDED : ஜூன் 27, 2026 05:39 AM
போச்சம்பள்ளி; மத்துார் எஸ்.ஐ., பயாஸ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கண்ணன்டஹள்ளி அருகே ரோந்து சென்றனர். அப்போது, அத்திகானுார் சாலையில் டாஸ்மாக் கடை அருகே, இருவர் பாலிதீன் பைகளுடன் சுற்றியதை கவனித்தனர். அவர்களிடம் போலீசார் சென்றபோது, ஒருவர் பாலிதீன் பையை போட்டு விட்டு தப்பி ஓடினார். மற்றொருவரை பிடித்து பையை பிரித்து பார்த்த-போது, அதில், 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்-தது.
விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி அடுத்த துடுக்கனஹள்ளியை சேர்ந்த சேட்டு, 42, என்-பதும், அப்பகுதியில் ஓட்டல் மாஸ்டராக பணிபு-ரிந்து வந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், தப்பியோடிய பர்கூர் அடுத்த சக்கில்-நத்தத்தை சேர்ந்த சசிகுமார் என்பவரை தேடி வரு-கின்றனர். கைதான சேட்டு மீது கிருஷ்ணகிரி தாலுகா மற்றும் கோவை மாவட்டம், தொண்டா-முத்துார், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன்களில் போதை பொருட்கள் விற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்-தக்கது.
