/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு
/
வீடு புகுந்து 4 பவுன் நகை திருட்டு
ADDED : ஜன 26, 2025 04:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அருகே, பூனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கட்ராஜ், 33, டிரைவர்; இவர் நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு, தன் மனைவி தாரணியுடன், வேலைக்கு சென்று விட்டார்.
மாலை, 4:15 மணிக்கு தாரணி வீட்டிற்கு திரும்பினார். அப்-போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 4 பவுன் தங்க நகை திருட்டு போயிருந்தது. இது தொடர்பாக, வெங்கட்ராஜ் கொடுத்த புகார் படி, மத்திகிரி போலீசார் விசாரித்து வருகின்-றனர்.

