/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கள்ளக்காதலன் காதை வெட்டிய பெண்ணின் கணவர் கைது
/
கள்ளக்காதலன் காதை வெட்டிய பெண்ணின் கணவர் கைது
ADDED : ஜன 25, 2024 12:40 PM
சிங்காரப்பேட்டை:கள்ளக்காதல் விவகாரத்தில், கள்ளக்காதலன் காதை கத்தியால் வெட்டிய, பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளப்பாடியை சேர்ந்தவர் தர்மேந்திரன், 44; இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த சரவணன், 41, என்பவரது மனைவி இலக்கியாவுடன் கள்ளத்தொடர்பால், கடந்த, 6 ஆண்டுகளாக இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இலக்கியா, தர்மேந்திரனையும் விட்டுவிட்டு, வேறு ஒருவருடன் சென்று விட்டார்.இதையறிந்த சரவணன், கடந்த, 22ல் தர்மேந்திரன் வீட்டிற்கு சென்று, 'என் குடும்ப வாழ்க்கையை கெடுத்து, மனைவியை பிரித்து அழைந்து வந்தாய். தற்போது நீயும் நிம்மதியாக வாழ முடியாமல் போய் விட்டது' என, தகராறில் ஈடுபட்டார். பின், கத்தியால் அவரது காதை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த தர்மேந்திரன், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிங்காரப்பேட்டை போலீசார், சரவணனை கைது செய்தனர்.