'ஊத்தங்கரையில் 33 ஏரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவேன்'
'ஊத்தங்கரையில் 33 ஏரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவேன்'
ADDED : மே 19, 2026 02:32 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் விருந்தினர் மாளிகையில், சந்திரசே-கரன் மக்கள் நல அறக்கட்டளை சார்பில் ஊத்தங்கரை, த.வெ.க., - எம்.எல்.ஏ., இளையராஜாவிற்கு பாராட்டு விழா நேற்று நடந்-தது. விழாவிற்கு ஸ்ரீவித்யா மந்திர் கல்வி குழுமங்களின் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். சந்திர சேகரன் மக்கள் நல அறக்கட்டளை உறுப்பினர்கள் முன்னிலை வகித்-தனர்.
த.வெ.க., மாவட்ட செயலாளர் முரளிதரன், மாவட்ட துணைச்செயலாளர் தாமோதரன், பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு, த.வெ.க., - எம்.எல்.ஏ., டாக்டர் இளையரா-ஜாவை பாராட்டி பேசினர்.
விழாவில் பேசிய ஊத்தங்கரை, த.வெ.க., - எம்.எல்.ஏ., டாக்டர் இளைய ராஜா, ''ஊத்தங்கரை தொகுதி வளர்ச்சி பெற பாடுப-டுவேன். மக்களின் கோரிக்கையை ஏற்று, அதை நிறைவேற்-றுவேன். ஊத்தங்கரை பகுதியில் விவசாயிகளின் கோரிக்கையான, 33 ஏரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவேன். அரசு மருத்து-வமனையை, மாவட்டத்தில் முதன்மை மருத்துவமனையாக விரி-வாக்க பணிகள் செய்து உயர்த்த பாடுபடுவேன்,'' என்றார்.
விழாவில், 33 ஏரி விவசாய சங்க தலைவர் உமாபதி, செயலாளர் வக்கீல் மூர்த்தி, யுனிக் கல்லுாரி தாளாளர் அருள், தொழிலதிபர் ஆர்.டி.அக்ரோ தர்மலிங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராஜா மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்-தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
