தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கி.கிரியில் திட்டப்பணிகள் துவக்கி வைப்பு

கி.கிரியில் திட்டப்பணிகள் துவக்கி வைப்பு

கி.கிரியில் திட்டப்பணிகள் துவக்கி வைப்பு


ADDED : மார் 14, 2026 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 07:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், 147.92 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை, துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, நேற்று முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்றார். அமைச்சர் சக்கரபாணி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ், இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழாவில், 147.92 கோடி ரூபாய் மதிப்பில், 706 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், 6,000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், துணை முதல்வர் உதயநிதி பேசியதாவது:

முதல்வர் ஸ்டாலின் பதவியேற்றவுடன், போட்ட முதல் கையெழுத்து விடியல் பயணம் திட்டத்திற்குதான். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒன்றரை கோடி பயணங்களை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். காலை உணவு திட்டத்தில் மாவட்டத்தில், 73,000 குழந்தைகள் பயன்பெறுகின்றனர். தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தில், 56,000 பேர் பயனடைகின்றனர். 20,000 மாணவர்கள் லேப்டாப் பெற்றுள்ளனர். நான் முதல்வன் திட்டத்தில், 12,000 பேர் வேலை பெற்றுள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகையை, 3.55 லட்சம் பேர் பெற்று வருகின்றனர். தற்போது முதல்வர் ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாய் உள்பட, 14 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அறிவுசார் வழித்தடத்திற்கு கெலவரப்பள்ளி அணை பாசனம் பெறும் பகுதிகள் மற்றும் சாலைகளின் இருபுறமும் நிலம் எடுப்பதாக வதந்தி பரப்பி வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள், விவசாயிகளுக்கு எதிராக எந்த திட்டத்தையும் செயல்படுத்த மாட்டார். பொருளாதாரத்தில் மாநிலம் வளர்ந்துள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்டத்தில், 3,000 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இது மகளிர் குழுக்களுக்கான நம்பிக்கை தொகை. மாவட்டத்தில், 88,000 பேருக்கு பட்டா, கலைஞர் கனவு இல்லம், மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை, விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தி.மு.க., அரசுக்கு மக்கள் தொடர் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், அனைத்து துறை அலுவலர்கள், தி.மு.க., மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us