/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.16.50 லட்சத்தில் கட்டிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு
/
ரூ.16.50 லட்சத்தில் கட்டிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு
ரூ.16.50 லட்சத்தில் கட்டிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு
ரூ.16.50 லட்சத்தில் கட்டிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு
ADDED : டிச 30, 2025 05:33 AM
கெலமங்கலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், குந்துமாரனப்பள்ளி பஞ்., உட்பட்ட மஞ்சளகிரி கிராமத்தில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, 16.50 லட்சம் ரூபாய் மதிப்பில், அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதை தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, சாலை வசதி செய்து கொடுக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்ற எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பி.டி.ஓ.,க்கள் முருகன், சீனிவாசமூர்த்தி, முன்னாள் பஞ்., தலைவர் லட்சுமிமுரளி உட்பட பலர் பங்கேற்றனர்.