sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'இந்தியாவில் உச்சத்திலுள்ள தொழில்நுட்ப துறை'

/

'இந்தியாவில் உச்சத்திலுள்ள தொழில்நுட்ப துறை'

'இந்தியாவில் உச்சத்திலுள்ள தொழில்நுட்ப துறை'

'இந்தியாவில் உச்சத்திலுள்ள தொழில்நுட்ப துறை'


ADDED : நவ 25, 2024 01:32 AM

Google News

ADDED : நவ 25, 2024 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் இன்ஜினியரிங் கல்-லுாரியின், 33வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது.

கல்லுாரி நிறுவனர் தம்பிதுரை எம்.பி., மற்றும் அறக்கட்டளை தலைவர் பானுமதி தம்பிதுரை தலைமை வகித்தனர். கல்வி அறக்-கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் லாசியா தம்பிதுரை, டாக்டர் நம்ரதா தம்பிதுரை முன்னிலை வகித்தனர். அதியமான் இன்ஜினி-யரிங் கல்லுாரி இயக்குனர் ரங்கநாதன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். ஏ.ஐ.சி.டி.இ., நிறுவன தலைவர் பேராசிரியர் டி.ஜி.சீதாராம் மற்றும் ஓலா நிறுவன மூத்த இயக்குனர் சிவக்குமார், 2022 - 23ம் கல்வியாண்டில் படிப்பை முடித்த, 933 மாணவ, மாணவிய-ருக்கு பட்டங்களை வழங்கினர்.

தொடர்ந்து, ஏ.ஐ.சி.டி.இ., நிறுவன தலைவர் டி.ஜி.சீதாராம் பேசி-யதாவது:

தகவல் தொழில்நுட்ப துறையில், செயற்கை நுண்ணறிவு புதிய கண்டுபிடிப்புகள் தினமும் வந்து கொண்டிருப்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ., கேரியர் போர்ட்-டலில், 7.5 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். 2.5 கோடி மாணவர்கள், இந்த கேரியர் போர்ட்டலில் இணைந்துள்ளனர். சந்-திராயன் திட்டத்தில், 30 சதவீதம் பெண்கள் பணியாற்றி வருகின்-றனர்.

பாதுகாப்பு துறையில் அதிகமான ராணுவ தளவாடங்களை ஏற்று-மதி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியா முழுவதும், 1.75 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறப்பாக இயங்குகின்-றன. இந்தியாவில் தொழில்நுட்ப துறை உச்சக்கட்டத்தில் உள்-ளது. தொழில் சம்பந்தமான கல்வி படிப்புகளுக்கு தேவையான நடவடிக்கையை

மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

வேளாங்கண்ணி குழும தலைவர் கூத்தரசன், மாணவ, மாண-வியர், பேராசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us