ADDED : மார் 29, 2026 02:26 AM
அ நிறம் | அளவு
ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகரை சேர்ந்தவர் அருண்குமார், 22. இவரது மனைவி மாதுரி, 20. இவர்களுக்கு கடந்த ஓராண்டிற்கு முன் திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மாதுரிக்கு கடந்த, 13ம் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த, 26ம் தேதி குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தாயும், சேயும் வீட்டிற்கு திரும்பினர்.
அன்றிரவு, 7:30 மணிக்கு, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் குழந்தை உயிரிழந்தது. ஓசூர் டவுன் போலீசார்
விசாரிக்கின்றனர்.
