தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரியில் முதல்கட்ட நீச்சல் பயிற்சி்

கிருஷ்ணகிரியில் முதல்கட்ட நீச்சல் பயிற்சி்

கிருஷ்ணகிரியில் முதல்கட்ட நீச்சல் பயிற்சி்


ADDED : ஏப் 07, 2024 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2024 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதல்கட்ட நீச்சல் பயிற்சி துவங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், நீந்த கற்று கொள்வதற்கான முதல்கட்ட பயிற்சி முகாம் கடந்த ஏப்., 1ல் துவங்கி வரும், 12 வரை நடக்கிறது. 2ம் கட்டமாக, 14 முதல், 25 வரையும், 3ம் கட்டமாக, 27 முதல் மே 8 வரையும், 4ம் கட்டமாக மே 10 முதல் 21 வரையும், 5ம் கட்டமாக, 23 முதல் ஜூன் 3 வரையும் நடக்கிறது. காலை, 7:00 முதல், 9:00 மணி வரையும், மதியம், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரையும் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதன்படி முதல்கட்ட பயிற்சியில், 2 மாணவியர், 14 மாணவர்கள் என மொத்தம், 16 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். முறையான பயிற்சியாளர்களை கொண்டு நீச்சல் பயிற்சி அளிப்பதால், ஆறு, குளம், கிரானைட் பள்ளம், கிணறு போன்ற பகுதிகளில் பெற்றோர்கள் சுயமாக தங்கள் குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்காமல், மாவட்ட விளையாட்டு அரங்கில், பாதுகாப்பாக குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க, பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்று, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் கேட்டுக் கொண்டார்.

பயிற்சி கட்டணமாக ஜி.எஸ்.டி.,யுடன், 1,770 ரூபாயை எஸ்.டி.ஏ.டி., இணையதள ஆன்லைன் மூலம் https://scms.sdat.broadline.co.in/#/membership----bokking/register முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 74017 03487 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us