/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
2.50 லட்சம் பனை நாற்றுகள் உற்பத்தி பணிகள் ஆய்வு
/
2.50 லட்சம் பனை நாற்றுகள் உற்பத்தி பணிகள் ஆய்வு
ADDED : அக் 10, 2025 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஊராட்சி ஒன்றியம் கவுண்டனுார் பஞ்.,க்கு உட்பட்ட பெணுகொண்டபுரம் ஏரியில், 99 ஏக்கர் பரப்பளவில், 2.50 லட்சம் புதிய பனை நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணியை கலெக்டர் தினேஷ்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.