/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வரலாற்று சிறப்புகளை அறிய மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
/
வரலாற்று சிறப்புகளை அறிய மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
வரலாற்று சிறப்புகளை அறிய மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
வரலாற்று சிறப்புகளை அறிய மாணவர்களுக்கு அறிவுறுத்தல்
ADDED : நவ 14, 2025 01:28 AM
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில், மாபெரும் தமிழ்கனவு, தமிழ்மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. 'திட்டமிடுவோம் வெற்றி பெறுவோம்' என்ற தலைப்பில் பொருளியல் அறிஞர் சோம.வள்ளியப்பன் பேசினார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் பேசியதாவது: தமிழகத்திலேய அதிக கோட்டைகள் உள்ள மாவட்டம் கிருஷ்ணகிரி. இம்மாவட்டத்தில் உள்ள மல்லபாடியில் தான், முதன் முதலில் பாறை ஓவியங்கள் கண்டறிந்தனர். சென்னானுார் அகழாய்வு மற்றும் மயிலாடும்பாறை அகழாய்வு ஆராய்ச்சி தளங்கள் உள்ளன. தமிழகத்தில் இரும்பின் பயன்பாடு, 4,800 வருடங்களுக்கு முன்பே இருந்தது என, அறிவியல் மூலமாக, தமிழக அரசு நிருபித்துள்ளது. இதுபோன்ற வரலாற்று சிறப்பம்சங்கள் குறித்து, மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தான், இந்த தமிழ்கனவு நிகழ்ச்சி நடக்கிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

