/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நவரை பருவ நெற்பயிர்களுக்கு காப்பீடு
/
நவரை பருவ நெற்பயிர்களுக்கு காப்பீடு
ADDED : ஜன 15, 2024 11:26 AM
கிருஷ்ணகிரி: பர்கூர் வட்டாரத்தில், நவரை பருவ நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இது குறித்து, பர்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி வெளியிட்டுள்ள அறிக்கை:
பர்கூர் வட்டாரத்தில், பாலேப்பள்ளி, பர்கூர், போச்சம்பள்ளி, நாகரசம்பட்டி, மத்துார் ஆகிய பிர்காவில் உள்ள கிராமங்களில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் சேத இழப்புகளை ஈடு செய்ய, நவரை பருவத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள், பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு, 550.50 ரூபாயை வரும், 31க்குள் செலுத்தி, பயிர் காப்பீடு தொகையாக, 36,700 ரூபாயை பெறலாம்.
இத்திட்டத்தில், பயிர் கடன் பெறும் மற்றும் பயிர் கடன் பெறா விவசாயிகள், 'இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொதுச்சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் அல்லது தொடக்க வேளாண் கூட்டுறவு
சங்கங்கள் மூலமாகவோ, தங்களது விருப்பத்தின்படி, பதிவு செய்து கொள்ளலாம். விதைப்பு முதல் அறுவடை வரை ஏற்படும் இழப்புகளுக்கு, பிர்கா வாரியாக சோதனை செய்து, இழப்பீட்டின் அளவை கணித்து, பயிர் காப்பீடு வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற, தங்களது ஆதார் எண், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.