/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
/
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
ADDED : மார் 02, 2024 03:19 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டார வேளாண்மைத்துறையின் அட்மா திட்டம் சார்பில், சூடுகொண்டப்பள்ளி கிராமத்தில், விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களில், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது.
வேளாண்மை உதவி இயக்குனர் புவனேஸ்வரி தலைமை வகித்து, மண் மாதிரி சேகரித்தல் முக்கியத்துவம், தொழில்நுட்ப முறைகள் பற்றி விளக்கினார். ஓசூர் வேளாண்மை அலுவலர் ரேணுகா, விதைநேர்த்தி செய்து விதைகளை விதைப்பதன் மூலம், பயிர் விளைச்சலை அதிகப்படுத்தலாம் என எடுத்துரைத்தார்.
அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் ஹரிஸ், கோடை உழவு மற்றும் காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் கோவிந்தசாமி, உழவன் செயலியின் பயன்கள் பற்றியும், அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா, மண் மாதிரி எடுக்கும் தொழில்நுட்பங்கள் பற்றியும் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். ஏற்பாடுகளை, உதவி தொழில்நுட்ப மேலாளர் சண்முகம் செய்திருந்தார்.

