தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/அஞ்சல் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளருக்கு தனிப்பயன் காசோலை புத்தகம் அறிமுகம்

அஞ்சல் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளருக்கு தனிப்பயன் காசோலை புத்தகம் அறிமுகம்

அஞ்சல் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளருக்கு தனிப்பயன் காசோலை புத்தகம் அறிமுகம்


ADDED : ஜூன் 05, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்-பாளர் பார்த்தீபன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்-தியா போஸ்ட் அஞ்சல் சேமிப்பு கணக்கு வாடிக்-கையாளர்களுக்கு புதிய தனிப்பயன் காசோலை புத்தகம் வசதியை கடந்த மே, 8 முதல் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. இதில் கணக்குதாரரின் பெயர், கணக்கு எண் மற்றும் இந்திய அஞ்சல் துறையின் ஐ.எப்.எஸ்.சி., குறியீடு அச்சிடப்பட்டி-ருக்கும். இதனால் பாதுகாப்பு அதிகரிப்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு வங்கி தரத்திலான சேவை கிடைக்கும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி உட-னடி காசோலை புத்தகம் அல்லது தனிப்பயன் காசோலை புத்தகத்தை ஒன்றை தேர்வு செய்-யலாம். தனிப்பயன் காசோலை புத்தகம், இலவச-மாக கணக்குதாரரின் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும். ஆரம்ப கட்டத்தில், இச்-சேவையை அஞ்சலத்தில் நேரடியாக விண்ணப்-பித்து பெறலாம். பின்னர் இணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவைகள் மூலமும் விண்ணப்பிக்கும் வசதி வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, அருகி-லுள்ள அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us