கி.கிரி ஆடவர் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி திட்டம்
கி.கிரி ஆடவர் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக பயிற்சி திட்டம்
ADDED : ஜூலை 05, 2026 02:56 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்டம் துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று, வேலைவாய்ப்புத் துறையின் செயல்பாடுகள் மற்றும் போட்டித்தேர்வுகள் எதிர்கொள்-வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
கவுரவ விரிவுரையாளர் சில்வியா வரவேற்றார். கல்லுாரி முதல்வர் அனுராதா தலைமை வகித்தார். வேதியியல் துறைத்த-லைவர் வெங்கடாசலம், இயற்பியல் துறை தலைவர் விஜயகுமாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மோனிஷா ஆகியோர் பேசினர்.இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் பேசிய-தாவது:
கல்லுாரியில் பயிலும் போதே, போட்டி தேர்வுகளுக்கு நாம் தயாராக வேண்டும். மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்-நெறி வழிகாட்டும் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., டி.என்.யு.எஸ்.ஆர்.பி., உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுக-ளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் திறன் வாய்ந்த பயிற்றுனர்-களை கொண்டு, ஸ்மார்ட் போர்டு வசதியுடன் நடத்தப்பட்டு வரு-கிறது.
தேர்வாளர்கள் வசதிக்காக இந்த அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில், 5,500-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கொண்ட நுால-கமும் இயங்கி வருகிறது.
இந்த இலவச பயிற்சி மையத்தில் பயின்றவர்களில் இதுவரை, 200 பேர் அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியர் தயக்கம் இல்-லாமல் ஆசிரியர்களிடம் தங்களது சந்தேகங்களை கேட்டறிந்து, தீர்வு காண வேண்டும். ஆங்கில பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
