தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ நாட்டுப்புற கலைப்பயிற்சி வகுப்புகளில் சேர அழைப்பு

நாட்டுப்புற கலைப்பயிற்சி வகுப்புகளில் சேர அழைப்பு

நாட்டுப்புற கலைப்பயிற்சி வகுப்புகளில் சேர அழைப்பு


ADDED : ஜூன் 15, 2026 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 15, 2026 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்ளியை பார்வையிட்ட பின், சேலம் மண்டல கலை பண்-பாட்டு மைய மண்டல உதவி இயக்குனர் சங்கர ராமன் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில், 25 இடங்களில், அரசு பகுதிநேர நாட்டுப்புற கலைப் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்-ளன. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு இசைப்பள்-ளியில் அமைத்துள்ள மையத்தில், சேவை-யாட்டம், பம்பை, புரவியாட்டம், நாடகம் ஆகிய நாட்டுபுற கலைப் பிரிவுகளில் ஓராண்டு பயிற்சி-யுடன் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை, 4:00 முதல், 6:00 மணி வரை நடக்க உள்ளது. 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும், 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதில் சேரலாம்.

ஓராண்டு பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு பிற்-காலத்தில் பள்ளி கல்வித்துறை மூலம் பயிற்சி அளித்து, பகுதிநேர கலை ஆசிரியராக பணியில் சேரவும், சுய தொழிலாக கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருவாய் ஈட்டவும் இயலும். நாட்டுப்-புற கலையில் ஆர்வமிக்க கிருஷ்ணகிரி மாவட்-டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவ, மாணவியர், இளைஞர்கள், பணிக்கு செல்வோர், இல்லத்தர-சிகள் என அனைவரும் நாட்டுப்புற கலை பயிற்சி பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 04343 234001, 95003 88896 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us