/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சின்ன ஏரி மீன் பிடி ஏலத்தில் முறைகேடு: லஞ்சம் கேட்பதாக புகார்
/
சின்ன ஏரி மீன் பிடி ஏலத்தில் முறைகேடு: லஞ்சம் கேட்பதாக புகார்
சின்ன ஏரி மீன் பிடி ஏலத்தில் முறைகேடு: லஞ்சம் கேட்பதாக புகார்
சின்ன ஏரி மீன் பிடி ஏலத்தில் முறைகேடு: லஞ்சம் கேட்பதாக புகார்
ADDED : ஜூலை 29, 2025 02:03 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகே, பெத்தனப்பள்ளியை சேர்ந்த ஸ்ரீதரன் மற்றும் சிலர், நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கிருஷ்ணகிரி, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சின்ன ஏரியில் மீன்பிடி குத்தகை உரிமம் எடுக்க கடந்த, 25ல், டெண்டர் விடப்பட்டது. அதன்படி மீன்பிடி உரிமைக்கு, வரைவோலை நகல், ஆதார் கார்டு, உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சரியான தேதிக்கு சமர்ப்பித்தோம். ஆனால், அதிக விலை கோரிய எங்களுக்கு, டெண்டர் வழங்காமல், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, சுகாதார அலுவலர் நாகநாதன் ஆகியோர், தங்களுக்கு தனியாக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் தான், ஒப்பந்தத்தை உங்களுக்கு தருவோம் என கூறினர்.
நாங்கள் பணம் கொடுக்க விரும்பாததால், டெண்டரை தள்ளுபடி செய்துள்ளனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட தினசரி காய்கறி அங்காடிகள், 1.20 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு, 56 கடைகளுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டும், யாரும் அதற்கு டெண்டர் கோரவில்லை.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில், ''கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஏரியில் மீன்பிடி டெண்டர் விட விதிமுறை படி வரைவோலை மற்றும் ஆவணங்கள் வைத்த, அனைவரது விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
விதிமுறைகளுக்கு மாறாக, ஆவணங்களின்றி வைக்கப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே நிராகரிக்கப்பட்டுள்ளன. அதன் படி, டெண்டரை ரத்து செய்து மீண்டும் வரும், 31ம் தேதி டெண்டர் நடத்த உள்ளோம். இதில் தகுதியுள்ள யார்
வேண்டுமானாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். அதிக தொகை கோருவோருக்கு, டெண்டர் வழங்கப்படும்,'' என்றார்.