தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ 'தன் அடையாளத்தை தி.மு.க., இழந்து விட்டது'

'தன் அடையாளத்தை தி.மு.க., இழந்து விட்டது'

'தன் அடையாளத்தை தி.மு.க., இழந்து விட்டது'


ADDED : ஆக 24, 2026 01:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 01:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓசூர்: ''தி.மு.க., தன் அடையாளத்தை இழந்து விட்டது,'' என, முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் கூறினார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, த.வெ.க., சார்பில், தமிழக அரசின், 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம், ஓசூர் ராம்ந-கரில் நேற்றிரவு நடந்தது. இதில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:வரும் உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்களில், த.வெ.க., மகத்தான வெற்றி பெறும். விஜய் மீதான மக்களின் பாசம், வாக்-குகளாக விழும். எம்.பி., தேர்தலில், த.வெ.க., உறுப்பினர்கள் வெற்றி பெற்று, புதுடில்லியில் தங்களது முதல் கணக்கை துவங்-குவார்கள். இரு ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த கட்சி, ஆட்-சியை பிடிக்குமா, விஜய் முதல்வராவாரா என, ஆயிரம் சந்தேகங்-களை எழுப்பினர். இன்று விஜய் முதல்வராகி உள்ளார். நாளை இன்னும் பல உயரங்களை தொடுவார். இதை காலம் தீர்மா-னிக்கும். தி.மு.க., தன் அடையாளத்தை இழந்து விட்டது. இதற்கு மேல் தி.மு.க.,விற்கு எதிர்காலம் என்பது கேள்விக்குறி தான். அ.தி.மு.க., போட்டியில் இல்லை. எம்.ஜி.ஆர்., தொகு-தியிலேயே அ.தி.மு.க., டிபாசிட் இழந்துள்ளது. இந்நிலைக்கு தலைமை தாங்குபவர் தான் காரணம். அ.தி.மு.க., அதிகாரம், அங்கீகாரம், முகவரியை இழந்து விட்டது. சட்டசபையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் கேலிக்கூத்தை பார்த்து மக்கள் வெட்கப் படுகின்றனர். தி.மு.க.,விற்கு வருங்காலத்தில் எதிர்க்-கட்சி வாய்ப்பு கூட கிடைக்காது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us