/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'நகரை துாய்மையாக வைக்க வேண்டியது மக்களின் கடமை'
/
'நகரை துாய்மையாக வைக்க வேண்டியது மக்களின் கடமை'
ADDED : செப் 20, 2024 02:27 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சி சார்பில், சுவஜ் பாரத் திட்டத்தில், 'துாய்-மையே என் சேவை' என்பது குறித்து விழிப்புணர்வு பேரணி, மனிதசங்கிலி நடந்தது.
நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு முன்னிலையில், நகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள், கவுன்சிலர்கள், 'நீர்நிலை-களை காப்போம், பிளாஸ்டிக்கை ஒழிப்போம்' என்ற உறுதிமொ-ழியை ஏற்றனர். தொடர்ந்து, பழையபேட்டை காந்தி சிலை அருகில், துாய்மை விழிப்புணர்வு குறித்த, மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. இதில், தலைமை வகித்து நகராட்சி தலைவர் பரிதா நவாப் பேசுகையில், ''கிருஷ்ணகிரி நகராட்சியில் கடந்த, 17 முதல் வரும், அக்., 2 வரை துாய்மை சேவை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் துாய்மை பணியும் நடக்கவுள்ளது. இன்று முதல்-கட்டமாக, 10வது வார்டில் துாய்மை பணி துவங்கவுள்ளது.
சுவர்களில் ஒட்டப்படும் போஸ்டர்களை கிழிப்பது, பிளாஸ்-டிக்கின் தீமைகள் குறித்து, பொதுமக்களிடம் எடுத்துரைப்பது உள்ளிட்டவைகளில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட வேண்டும். நாம் எவ்வளவு சுத்தம் செய்தாலும், நகரை துாய்மையாக வைக்க வேண்டியது, பொதுமக்களின் கடமை என்பதை அவர்கள் உணர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
நகராட்சி துப்பரவு அலுவலர் ராமகிருஷ்ணன், துாய்மை இந்-தியா இயக்க மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள், நகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.