/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம்
/
ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு தினம்
ADDED : டிச 06, 2024 07:56 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., சார்பில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 8ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அவரது உருவ படத்திற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமையில், அ.தி.மு.க.,வினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
நகர, அ.தி.மு.க., சார்பில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில், நகர செயலாளர் கேசவன் தலைமையிலும், கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், கிட்டம்பட்டியில், ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன் தலைமையிலும், மேற்கு ஒன்றியம் சார்பில், கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியிலும், காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில், ஒன்றிய செயலாளர் பையூர் ரவி, நகர செயலாளர் விமல் ஆகியோர் தலைமையிலும், சூளகிரி மேற்கு ஒன்றியம் சார்பில், அத்திமுகம் கிராமத்தில், ஒன்றிய செயலாளர் பாபு தலைமையிலும் ஜெயலலிதாவின் உருவபடத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
* மத்துார் மேற்கு ஒன்றியத்தில் நேற்று, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தலைமையிலும், பர்கூர் தெற்கு ஒன்றியம், போச்சம்பள்ளியிலும் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு, கட்சியினர் மலர் துாவி, மவுன அஞ்சலி செலுத்தினர்.* ஊத்தங்கரையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமையில், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவபடத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தப்பட்டது.