/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஜெருசலேம் புனித பயணம்; மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
/
ஜெருசலேம் புனித பயணம்; மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
ஜெருசலேம் புனித பயணம்; மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
ஜெருசலேம் புனித பயணம்; மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 17, 2025 08:01 AM
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளி-யிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய, 600 கிறிஸ்தவர்கள் பயனடையும் வகையில், ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய, 550 கிறிஸ்தவர்களுக்கு நபர் ஒருவருக்கு, 37,000 ரூபாய், 50 கன்னியாஸ்திரிகள் மற்றும் அருட்சகோதரிகளுக்கு தலா, 60,000 ரூபாய் மானியம் வழங்கப்ப-டுகிறது.
இ.சி.எஸ்., முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்-டத்தில், கடந்த நவ.,1க்கு பிறகு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்-ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்ப படிவத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம். www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவி-றக்கம் செய்யலாம்.வரும், 2026 பிப்., 28க்குள், உரிய ஆவணங்களுடன் கமி-ஷனர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம். சேப்பாக்கம், சென்னை- 600 005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

