/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கொத்தனார் வீட்டில் நகை திருட்டு
/
கொத்தனார் வீட்டில் நகை திருட்டு
ADDED : ஜூலை 04, 2024 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: பாகலுார் அருகே ஒட்டப்பள்ளியை சேர்ந்தவர் ஆனந்த், 40, கொத்தனார்; இவர் கடந்த, 28 காலை, 8:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, மனைவியுடன் வேலைக்கு சென்றார்.
மாலை, 5:00 மணிக்கு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த, 3.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 7 பவுன் நகை திருட்டு போயிருந்தது. ஆனந்த் புகார்படி, பாகலுார் போலீசார் விசாரித்து வரு-கின்றனர்.