ADDED : மார் 31, 2025 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர் அருகே, புனுகன்தொட்டியை சேர்ந்தவர் ராமாரெட்டி மனைவி அனுசுயம்மா, 65. கடந்த, 28 காலை, 10:45 மணிக்கு, தன் வீட்டின் அருகே அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த, 40 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் ஆண், அனுசுயம்மா-விடம் பேச்சு கொடுத்து, திருடர்கள் நடமாட்டம் உள்ளது. அதனால், நகையை கழற்றி கொடுங்கள். உங்கள் சேலையில் கட்டி கொடுக்கிறேன் எனக்கூறி, அனுசுயம்மாவிடம் இருந்து, 4 பவுன் நகையை, இருவரும் வாங்கினர்.
பின்னர் அனுசுயம்மா கவனத்தை திசை திருப்பி, அவரது சேலையில் மண் மற்றும் ஒரு கவரிங் செயினை வைத்து கட்டி கொடுத்து விட்டு சென்றனர். வீட்டிற்குள் சென்ற அனுசுயம்மா சேலையை பார்த்த போது, நகை மாயமானது தெரிந்தது. நேற்று முன்தினம் அவர் புகார் படி, ஹட்கோ போலீசார் விசாரித்து
வருகின்றனர்.