/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.பூசாரிப்பட்டியில் எருது விடும் திருவிழா
/
கே.பூசாரிப்பட்டியில் எருது விடும் திருவிழா
ADDED : பிப் 17, 2024 12:45 PM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டி கிராமத்தில் நேற்று, எருது விடும் திருவிழா நடந்தது.
இதில், 300க்கும் மேற்பட்ட எருதுகளை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். எருதுகளை குறிப்பிட்ட தொலைவிற்கு ஓடவிட்டு, குறைந்த நேரத்தில் கடக்கும் காளையின் உரிமையாளருக்கு பரிசு வழங்கப்பட்டன.
அதன்படி, புலியரசி நந்திதேவன் எருதுக்கு முதல்பரிசாக, ஒரு லட்சம் ரூபாய், திப்பம்பட்டி ராகவி எருதுக்கு இரண்டாம் பரிசாக, 80,000, போலுப்பள்ளி ராவணன் எருதுக்கு மூன்றாம் பரிசாக, 60,000, திருப்பத்துார் அதீரா எருதுக்கு நான்காம் பரிசாக, 50,000 ரூபாய் என மொத்தம், 60 எருதுகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமார் காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினார்.
ஒன்றிய செயலர்கள் கண்ணியப்பன், சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயாஆஜி உள்பட பலர் உடனிருந்தனர். கால்நடைத்துறை மூலம் எருதுகளை பரிசோதனை செய்து சான்று வழங்கப்பட்டன.