/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் காலபைரவாஷ்டமி பெருவிழா துவக்கம்
/
கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் காலபைரவாஷ்டமி பெருவிழா துவக்கம்
கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் காலபைரவாஷ்டமி பெருவிழா துவக்கம்
கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் காலபைரவாஷ்டமி பெருவிழா துவக்கம்
ADDED : நவ 18, 2024 01:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில், கால-பைரவாஷ்டமி பெருவிழா கடந்த, 15 முதல் வரும், 25 வரை நடக்கிறது. நேற்று முன்தினம் காலை, ஐங்கரன் வேள்வி மற்றும் கொடியேற்றமும், பகல், 12:00 மணிக்கு, கலைக்கல்லுாரி துணை பேராசிரியர் தனராசு, 'ஊனுடம்பு ஆலயம்'
என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
நேற்று காலை, திருமுறை தீந்தமிழ் வேள்வியும், 11:00 மணிக்கு, பைரவ சுவாமிகள் முன்னிலையில், 63
நாயன்மார்களுக்கு சிறப்பு வழிபாடு, பெரிய புராண பாராயணம் நடந்தது. தொடர்ந்து, புதிய பாரதி தமிழியக்கம் நிறுவனர் மணி-கண்டன், 'பெரிய புராணத்தில் சமத்துவம்' என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். மாலை, 5:00 மணிக்கு, திருவிளக்கு பூஜையும், நீதிபதி பாலமுருகன் தலைமையில், 'கடவுளுக்கும், பக்தனுக்கும் இடையில், இன்னொருவர் தேவையா' என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடந்தது.
இன்று (நவ.18) காலை, 6:00 மணிக்கு, முருகன் கோவில் கும்பா-பிஷேகம், பகல், 3:00 மணிக்கு, புலவர் தியாகசீலன், 'முருகனும் தமிழும்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, அருள்நிறை திருமுருக பெருமான் காவடி ஆட்டத்-துடன் திருவீதி உலா, பொம்மலாட்டம் நடக்க உள்ளது. நாளை காலை, 6:00 மணிக்கு, சொர்ணாகர்ஷண பைரவர் வேள்வி, காலை, 11 மணிக்கு, ஓதுவார் சுந்திரமூர்த்தியின், 'பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை' என்ற தலைப்பில் சொற்பொழிவு, மாலை, 6:00 மணிக்கு, சொர்ணாகர்ஷண பைரவர் திருவீதி உலா, இரவு, திருமுறை இன்னிசை கச்சேரி நடக்க உள்ளது.