/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகா மதுபான பாக்கெட் பறிமுதல்
/
கர்நாடகா மதுபான பாக்கெட் பறிமுதல்
ADDED : ஏப் 06, 2024 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்,:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஓசூர் மத்திகிரி ஸ்டேஷன் போலீசார், தமிழக எல்லையில் உள்ள
பூனப்பள்ளி சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது, கர்நாடகாவில் இருந்து வந்த சேன்ரோ காரை சோதனை செய்ய
நிறுத்தியபோது, டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதனால்
போலீசார் பின்னால் விரட்டி சென்று, சிறிது துாரத்தில் காரை பிடித்தனர்.
டிரைவர் கீழே இறங்கி தப்பியோடிய நிலையில், காரில் போலீசார் சோதனை
செய்தனர். அதில் மொபைல்போன் மற்றும் 818 கர்நாடகா மாநில மதுபான
பாக்கெட்டுகள், 19 பீர் பாட்டில்கள் இருந்தன. இதனால் காருடன் அவற்றை
பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

