ADDED : மார் 25, 2026 07:05 AM
அ நிறம் | அளவு
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், தமிழக எல்லையான கெம்பட்டி கிராமத்தில், நேற்று காலை வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக கர்நாடகா மாநிலம், பெங்களூருவை சேர்ந்த அருண், 30, என்பவர் ஓட்டி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, 3,525 ரூபாய் மதிப்புள்ள, 15 பாக்கெட் கர்நாடகா மதுபானம் இருந்தது. இதனால், மதுபானத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
