ADDED : ஜூலை 01, 2026 05:05 AM

தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி
மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கர்நாடகா மாநிலத்தை ஒட்டி
அமைந்துள்ளது. அதனால் அம்மாநில குப்பை தமிழக எல்லை கிராமங்களில்
கொட்டி செல்லப்படுகின்றன. குறிப்பாக, அரசகுப்பம் பஞ்., உட்பட்ட
பென்சப்பள்ளி கிராமத்தில், கர்நாடகா மாநிலத்திலிருந்து லாரியில்
கொண்டு வரப்படும் கெமிக்கல் மற்றும் குப்பை கழிவு நேற்று
கொட்டப்பட்டன. இதுபோன்று தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால்,
அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
கடும் துர்நாற்றம்
வீசுவதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளுக்கு
பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பாக,
தேன்கனிக்கோட்டை ஸ்டேஷனில், வேணுகோபால் என்ற விவசாயி புகார்
செய்துள்ளார். இப்பகுதியில், வி.ஏ.ஓ., சங்கர் கணேஷ் பார்வையிட்டு
ஆய்வு செய்துள்ளார். வரும் காலங்களில் கர்நாடகா மாநில கழிவுகள்
கொட்டுவதை தடுத்து, வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க,
அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
