ADDED : ஜூன் 08, 2026 05:13 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சூரன்-குட்டை கிராமத்திலுள்ள ராதா, ருக்மணி சமேத கிருஷ்ணன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. முன்னதாக, புண்ணிய நதிகளிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை, கிராம மக்கள் மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்-றனர். தொடர்ந்து, ராதா, ருக்குமணி சமேத கிருஷ்ணன் கோவில் கோபுரம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்-தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காவேரிப்பட்டணம் அடுத்த எர்ரஹள்ளி பஞ்., உட்பட்ட ஹரிநகரில் புதியதாக கட்டப்பட்ட வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. காவேரிப்பட்டணம் தென்-பெண்ணை ஆற்றில் இருந்து, பக்தர்கள் புனித நீர் மற்றும் முளைப்பாரி எடுத்து, கோவிலுக்கு ஊர்-வலமாக சென்றனர். கோவில் கோபுரம் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
